நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
1994இல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று கலக்கிய சுஷ்மிதா உலகளவில் புகழ் பெற்றார். பின்னர் ரட்சகன், முதல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் வாயிலாக சினிமா ரசிகர்களிடமும் பரவலான கவனத்தைப் பெற்ற நடிகை சுஷ்மிதா சென், தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள மிகவும் மெனக்கெடுபவர். எந்தளவுக்கு மெனக்கெடுபவரென்பது அவரது இன்ஸ்டகிராம் பக்கம் அடிக்கடி சென்று பார்ப்பவர்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
With all my love!!! #dilbar #reloaded #superfun 😁💋🎵💃🏻 pic.twitter.com/t2Lt9TdvBL
— sushmita sen (@thesushmitasen) September 8, 2018
இந்த நிலையில் தற்போது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கடுமையான உடற்பயிற்சிகளால் வலிமைமிக்கதாக மாறியுள்ள தனது உடலின் பின்புறத்தைக்காட்டி நிற்கிறார் சுஷ்மிதா.
இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் அதில், “பெரிய அளவிலான முடிவுகள் கிடைக்க வேண்டுமாயின் நாம் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” எனும் தொனியில் குறிப்பிட்டு அனைவருக்கும் தனது அன்பைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் சிறப்புக் கவனம் பெற்று வருகிறது.
Discussion about this post