முதலில் ஒரு சுத்தமான கேரட் எடுத்து கொள்ளுங்கள். கேரட்டை முதலில் சுத்தமாக கழுவி கொள்ளவும். பின்னர் கேரட்டை தோல் நீக்காமல் சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். அதனுடைய தோலில்தான் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. அதாவது ஸ்கின் வொயிட்டினிங்க்கு கொடுக்க கூடிய பீட்டா காரட்டீன் இருக்கிறது.
அதன் பின்னர் ஒரு சுத்தமான தக்காளியை எடுத்து கொள்ளுங்கள். அதையும் சுத்தமாக கழுவி கொள்ளவும். தக்காளியையும் தோல் நீக்காமல் சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். இதனை ஒரு மென்மையான பேஸ்ட்டாக மைப்போல அரைத்து தயாரித்து கொள்ளவும்.
அதன் பின்னர் காய்க்காத ஒரு அரை கப் அளவு பால் சேர்த்து கலந்து கொள்ளவும். அதுவும் பசும்பால் சேர்ப்பது நல்லது. பின்னர் நல்ல கலந்து கொள்ளவும். இவ்வளவுதான் இப்ப ரெடி ஆகிவிடும் , இந்த பேக்கை 7 நாட்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம். எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம்.
இந்த பேக்கை தேவைக்கு தனியாக எடுத்துதான் உபயோகிக்க வேண்டும். இரவு உறங்க போகும் முன் முகத்தை நன்றாக கழுவிவிட்டு இந்த பேக்கை போட்டு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவிவிட வேண்டும். இதனை தொடர்ந்து ஒரு 7 நாட்கள் உபயோகிக்க வேண்டும். அதன் பின்னர் வேண்டும் என்றால் உபயோகிக்கலாம்.
இது ஒரு நல்ல ஸ்கின் வொயிட்டினிங் கொடுக்கும் டெட் செல்களை அழிக்கும். கேரட் ம்ற்றும் தக்காளி உங்க ஸ்கின்க்கு ஒரு நல்ல பிளீச்சிங் கொடுக்கும். அது மட்டுமில்லாமல் ஒரு நல்ல வொயிட்டினிங்கும் கொடுக்கும். இதை இன்னொரு வகையில் பயன்படுத்தலாம் என்னவென்றால் ஐஸ் கட்டிகளாக ஊற்றி வைத்து அதனை தினமும் ஒரு ஐஸ் கட்டி எடுத்து மசாஜ் செய்யலாம். இது இன்னும் நல்ல வொயிட்டினிங் கொடுக்கும்.
இன்னும் அழகாக ஸ்கின்னை வொயிட்டினிங்காக எப்படி வைக்கலாம் என்றால் தினமும் 2 கேரட் பச்சையாக தோல் நீக்காமல் சாப்பிடுங்கள். தக்காளியிலும் வைட்டமின் சி இருக்கு. ஆனால் தக்காளி பழத்தை பச்சையாக சாப்பிட முடியாது. அதனால் ரசத்தில் நன்கு வேகாமல் இருக்கும் போது சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. நீங்கள் கட்டாயம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெறும் 15 நாள்களிலே ஸ்கின் நன்றாக வொயிட்டினிங்காக இருப்பதை உங்களால் உணர முடியும். கருப்பு திராட்சை மற்றும் அரைகீரை,கரிசலாங்கன்னி கீரை வார்ம் ஒரு முறை சாப்பிட்டால் ஸ்கின்க்கு நல்லது.
Discussion about this post