சிறுநீரகங்கள்- நீண்ட நேரம் கண் விழித்தல் மற்றும் உறக்கமின்மை.
வயறு- குளிரூட்டப்பட்ட உணவுகள்.
நுரையீரல்- தூசு,புகை.
கல்லீரல்- அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்.
இதயம்- உப்பு நிறைந்த உணவுகள்.
கனையம்- தேவையற்ற நொறுக்கு தீனி.
குடல்- உனவுகளை மிகுதியாக உண்பது.
கண்கள்- மிக அதிக நேரம் தொலைக்காட்சி,செல்போன் பார்ப்பது
பித்தப்பை- காலை உணவை தவிர்ப்பது.
இவ்வாறாக பல செயல்கள் நம்முடைய உள்ளுறுப்புகளை அஞ்ச செய்கிறது. மேலும் உங்களுடைய பயப்படும் குணம் உங்கள் சிறுநீரகத்தை பாதிக்கிறது. உங்களுடைய கோபப்படும் குணம் உங்கள் கல்லீரலை பாதிக்கிறது. உங்களுடைய கவலைப்படும் குணம் உங்கள் குடலை பாதிக்கிறது. உங்களுடைய மன அழுத்தம் உங்கள் இருதயம் மற்றும் மூளையை பாதிக்கிறது. உங்களுடைய துக்கம் உங்கள் கல்லீரலை பாதிக்கிறது.
தொலைபேசி பேச இடது காதை பயன்படுத்துங்கள். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு முட்டைக்கோஸ் பயன்படுத்துங்கள். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் மருத்துவ குணம் வாய்ந்தது வெண்டைக்காய். நரம்பு தளர்ச்சியைப் போக்குவது செள செள.
இதனை எங்கு கண்டாலும் வாங்கி உண்ணுங்கள். உங்கள் வம்சத்திற்கே ச்ர்க்கரை நோய் வரவிடாது.
இதேப்போல் முருங்கையையும் விட்டு விடாதீர்கள். முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் ஏன் தெரியுமா? இந்த மரத்தி கீரை, காய், பூ இவைகளை உணவில் பயன்படுத்துபவர்கள் வயதான காலத்தில் கோலூன்றி நடக்க தேவையிராது. மனிதன் இளமையோடு வாழ தேவையான எல்லாச் சத்துக்களும் இதில் உள்ளன. எனவேதான் முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லப்படுகிறது.
கீழாநெல்லி இலையுடன் மஞ்ச்ள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, சுமார் 15 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
வாழைப்பழத்தை உண்பதற்கு சிறந்த நேரம் பகல். இரவில் சாப்பிடாதீர்கள். சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். சோறு உண்பதற்கு சிறந்த நேரம் பகல். இரவில் சாப்பிடாதீர்கள். சாப்பிட்ட உடனேயே பழங்களைச் சாப்பிடும் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. ஆப்பிள் சாப்பிடும் சிறந்த நேரம் காலை. இரவில் சாப்பிடாதீர்கள். பால் குடிப்பதற்கு சிறந்த நேரம் இரவு. காலையில் குடிப்பது தவறான நேரம். தயிர் உண்பதற்கு சிறந்த நேரம் பகல். இரவில் உண்பது தவறான நேரம்.
நம்முடைய உதிரிபாகங்கள் விலையுயர்ந்தவை. பழுதடைந்து விட்டால். மாற்றிப் பொருத்த மிகவும் செலவு பிடிக்கும். எளிதாக கிடைக்காது. அசல் உறுப்புகளைப்போல செயல்படாது. எனவே உண்ணும் உணவில் கவனம் தேவை. வாழ்க்கை முறையிலும் கவனம் தேவை.
Discussion about this post