நடிகர் அஜித்தைக் கொண்டாட அவரது ரசிகர்கள் முதல் காரணமாக சொல்வதே எளிமை. அதை உறுதிப்படுத்தும் வகையில் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டு அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சில விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், தன்னுடைய மகள் படிக்கும் பள்ளிக்கு சென்றுள்ளார் அஜித். அங்கு பள்ளி காரிடாரில் அஜித் நடந்து வருகிறார். அவரை பார்க்கும் ஊழியர்கள் சிலர் அவருடன் போட்டோ எடுக்க முற்படுகிறார்கள்.
அப்போது அஜித், “ஸ்கூலில் போட்டோ எடுக்கக் கூடாதுங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. இன்னொரு நாள் நாம எடுப்போம். நானே சொல்லி அனுப்புறேன். தம்பி அந்த கேமரா மட்டும் ஆஃப் பண்ணுங்க. வள்ளி மேடமிடம் ரெக்வெஸ்ட் பண்ணியிருக்கிறேன். தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்கெல்லாம் ஸ்டாஃபா… என்ன பண்றீங்க” எனப் பேசுகிறார். அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து அஜித் தன்மையாக எடுத்து சொன்னதை பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post