கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், மோகன் லாலின் கதாபாத்திரம் குறித்த விவரம் தெரியவந்துள்ளது.
நடிகர் சூர்யாவின் 37ஆவது படத்தை, கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார். லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, தற்போது வடஇந்தியாவில் நடைபெற்று வருகிறது. சூர்யாவுடன், மோகன் லால், ஆர்யா, சயீஷா, சமுத்திரக்கனி, பொமன் இரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பாளராகப் பணிபுரிகிறார்.
இந்த நிலையில் உயர் பதவியிலுள்ள ஐபிஎஸ் அதிகாரியாக சூர்யா நடிக்கிறார் எனத் தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது மோகன் லாலின் கதாபாத்திரம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பிரதமர் வேடத்தில் மோகன் லால் நடிக்க, அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் பிரிவின் தலைவராக சூர்யா நடிக்கிறார் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக இப்புகைப்படங்கள் அமைந்திருக்கின்றன.
லண்டனில் படமாக்கப்பட்ட காட்சிகளைத் தொடர்ந்து, படத்தின் முக்கிய களமாக இடம்பெறும் நாட்டின் எல்லைப் பகுதிகள் தொடர்பான காட்சிகளுக்காக டெல்லி, மணாலி உள்ளிட்ட இடங்களை கே.வி.ஆனந்த் தேர்வு செய்திருந்தார். அந்தக் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார். குலு மணாலியில் வெயிலும், மழையும் கலந்த தட்பவெப்ப நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே, காட்சிகளுக்கு ஏற்ப அதை ஆனந்த் குழுவினர் படமாக்கி வருகின்றனர்.
Discussion about this post