இந்திய சினிமா உலகில் மிகவும் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று சமந்தா-நாக சைதன்யா ஜோடி. இவர்களைப் போல வாழவேண்டும் என்று ரசிகர்கள் பெருமூச்சுவிடும் அளவுக்கு இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை நடத்திவருகிறார்கள். அப்படிப்பட்ட ஜோடிக்கு வரும் முதல் திருமண நாள் எப்படி கொண்டாடப்படும் எனக் காத்திருந்தவர்களுக்கு பரிசாக தங்களது முதல் திருமண நாள் புகைப்படங்களைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார் சமந்தா.
குரோஷியாவிலுள்ள டர்போனிக் நகருக்கு தங்கள் முதல் திருமண நாளினைக் கொண்டாடச் சென்றிருக்கும் சமந்தா, இருவரும் எடுத்துக்கொண்ட ஃபோட்டோ ஒன்றினை ஷேர் செய்து “என் வாழ்க்கையில் ஏற்பட்ட சிறந்தவைகளில் ஒன்று, நான் ஒவ்வொருநாளும் உன்னிடம் திரும்ப வந்து சேர்ந்துவிடுகிறேன். என்னில் பாதிக்கு முதல் திருமண நாள் வாழ்த்துகள். உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நாக சைதன்யா” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
திருமண நாளினை குரோஷியாவில் கொண்டாடவேண்டும் என்ற முடிவினைத் தாண்டி, அந்த பயணத்துக்கு தனியே செல்லாமல் நாகார்ஜுனா, அமலா, அகில் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடன் அழைத்துச்சென்றிருக்கிறார்.
சென்றமுறை சமந்தா-நாக சைதன்யா ஜோடி ஒன்றாக சென்ற பயணத்தின்போது ‘பிகினி’ உடை அணிந்ததால் ‘திருமணமான பெண் இப்படியெல்லாம் உடை அணிவதா. பெரியவர்கள் உடன் இருந்தால் இப்படியெல்லாம் செய்யமுடியுமா’ என டிஜிட்டல் கலாச்சாரக் காவலர்கள் சமந்தாவை ஆக்ரோஷமாகக் கண்டித்தனர். ஆனால், அதற்கு மிகவும் சாதுர்யமாக உங்கள் வேலையைப் பாருங்கள் எனக் கூறிவிட்ட சமந்தா தற்போதைய பயணத்துக்கு அந்தப் பெரியவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.
Discussion about this post