இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் தனி குடும்பமாகதான் இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். அதனால் குழந்தைகளை கவனிக்க நேரம் இல்லாமல் அவர்கள் கையில் செல்போனை கொடுத்து விடுகிறார்கள். மேலும் அதில் கேம் விளையாடுவது, வீடியோ பார்ப்பது போன்ற பல விசியங்களை குழந்தைகள் கற்று வைத்திருக்கிறார்கள். அதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பெரியவர்களால்தான் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைத்தால் சிறியவர்களாலும் இருக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது. 1 வயது குழந்தை கூட ஸ்மார்ட் போன் உபயோகிக்க தெரிந்துள்ளது.
தலையை எப்பொழுதும் குனிந்து கீழ்நோக்கிதான் ஸ்மார்ட் போனை உபயோகிக்கிறார்கள். நீண்ட நேரம் இவ்வாறே ஸ்மார்ட் போனை உபயோகிக்கப்படுத்தும் போது அவர்களின் கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படும். அவ்வாறு தொடர்ந்து தலையை குனிந்து கீழ்நோக்கி ஸ்மார்ட் போனை உபயோகிக்கப்படுத்தும் போது கழுத்து வலி அதிகமாகும். மேலும் தோல்ப்பட்டை மற்றும் கையின் விரல்களினிடையே வலி போன்றவை ஏற்படும். பின்னாளில் இது பெரிய ஆபத்தாக அமையும். மேலும் குழந்தைகளின் கையால் எழுதும் திறன் பாதிக்கப்படும். தசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.
குழந்தைகள் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவதால், மொபைல் கதிரியக்கமானது அவர்களை பாதிக்கிறது. இப்படிப்பட்ட ஆபத்தில் இருந்து எவ்வாறு வெளிவரலாம் என்றால், செல்போனை குழந்தைகளிடம் கொடுக்கும் போது ஏரோபிளைன் மோடில் போட்டு அவர்களிடம் கொடுக்கலாம். இவ்வாறு கொடுத்தால் கதிரியக்க பாதிப்பு உண்டாகமல் தடுக்கலாம்.
குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகிக்கப்படுத்துவதை தடுக்க முடியவில்லை என்றால் குறைவாக பயன்படுத்த சொல்லுங்கள். அரைமணி நேரத்திற்கு ஒரு தடவை இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாடவோ அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை ஈடுப்படுத்தவோ செய்யுங்கள்.
மேலும் நன்றாக ஓய்வெடுப்பது ஒரு சிறந்த தீர்வாக அமையும். ஓய்வெடுத்தால் எந்த வலியாக இருந்தாலும் தீர்ப்பது ஓய்வு மட்டுமே. எனவே கண்டிப்பாக ஓய்வு எடுக்க சொல்லுங்கள்
குழந்தைகள் ஸ்மார்ட் போன் உபயோகப்படுத்தும் போது நேராக அமர்ந்து இருக்கிறார்களா, எவ்வாறு உபயோகிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் குழந்தைகளின் கல்வி சம்மந்தமாக ஏராளமாக அப்ளிகேசன்கள் இருக்கின்றன. இதனை காரணமாக கொண்டு குழந்தைகளிடம் மொபைல் போனை நிறைய நேரம் கொடுப்பதை தவிருங்கள்.
Discussion about this post