1933ஆம் ஆண்டு ஸ்பெயினில் பிறந்த இவர் , மேடைக்கச்சேரியில் பாடுவதை சிறு வயதிலேயே தொடங்கினார். பாரம்பரிய இசையை உணர்வுகளுடன் இணைத்து இசைக்கருவிகளோடு சேர்ந்து பாடும் ஓப்பரா இசையில் கைதேர்ந்தவராக திகழ்ந்தார்.
இவரது ‘ஹை–பிட்ச்‘ (High Pitch) அளவிற்கு உலகில் வேறு எந்த பாடகியாலும் நடுக்கமின்றி பாட முடியாது என்பது மான்ஸெரட்டின் தனிச்சிறப்பு. இவரது பாடல், 1992 பார்ஸிலோனா ஒலிம்பிக்கின் ‘தீம்‘ (Theme) பாடலாக இடம் பெற்றிருந்தது.
மான்ஸெரட்டிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் பார்ஸிலோனா மருத்துவமனையில் கடந்த மாதம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் உடலை விட்டு பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அங்குள்ள தேவாலய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Discussion about this post