தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், தனது வெற்றிக்கு ரசிகர்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மொபைல் ஷாப் ஒன்றின் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை சமந்தா மதுரை வந்திருந்தார். அந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாலியல் என்பது எல்லாத் துறைகளிலும் உள்ளது போல் சினிமா துறையிலும் உள்ளது.
ஒரு சில கருப்பு ஆடுகளால் பாலியல் ரீதியான புகார் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெயர் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் எனக்கு எந்த குறையும் இல்லை. எனது 10 ஆண்டு கால சினிமா வாழ்வில் இதுவரை எனக்கு எந்த வித பாலியல் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. சினிமா துறை என்பது எனக்கு கடவுளுக்கு சமமானது என தெரிவித்தார்.
மேலும் முன்னனி நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை பற்றிய கருத்துக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், தமிழகத்தில் ரசிகர் இல்லாமல் நான் இல்லை, சினிமா துறையில் எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய பங்கு என குறிப்பிட்டார்
Discussion about this post