நம்முடைய உடம்பில் இரத்ததின் அளவு குறைவாக இருந்தால் தலை சுத்துதல், தலை வலி போன்ற பல விதமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே அந்த பிரச்சனையை தீர்த்து இரத்ததின் அளவு கூட்ட வேண்டும் என்றால் அது ஹீமோகுளோபின்தான். ஹீமோகுளோபின் உருவாவதற்கு அயன் கண்டண்ட், வைட்டமின் சி, பாலிக் ஆசிட் இந்த 3ம் சேரனும். அப்படி சேரனும்னா நம்ம தினமும் சாப்பிடக்கூடிய உணவுதான்.
இரத்ததின் அளவு அல்லது ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பது என்றால், கர்ப்பினியா இருக்கக்கூடிய பெண்களுக்கு அயன் மாத்திரைகள் கொடுப்பது. ஏன் என்றால் இந்த டைம்ல குழந்தைக்கும் சேர்த்து ரொம்ப இரத்தம் தேவைப்படுகிறது. அதேப்போல் மாதவிடாய் நேரங்களிலும் அதிகஅளவு இரத்தம் தேவைப்படுகிறது.
நீங்கள் வெஜிட்டேரியனா இருந்தால் பீட்ரூட், மாதுளை, தற்பூசணி, ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, திராட்சை, வாழைப்பழம்,கொய்யாப்பழம், இந்த வகையான பழங்கள் எல்லாம் சாப்பிடலாம். நீங்கள் நான் வெஜ்ஜா இருந்தால் முட்டை, சிப்பி, கடலில் இருந்து கிடைக்கும் சின்ன சின்ன மீன்கள் எல்லாம் சாப்பிடலாம் . பேரித்தம் பழம்,பருப்பு வகைகள், பீன்ஸ் வகைகள், வேர்க்கடலை, சுண்டல், சோயா பீன்ஸ் இந்த வகைகள் எல்லாம் அயன் கண்டண்ட் தாராளமாகவே இருக்குது.
இத்தகைய அயன் கண்டண்ட் உள்ள உனவுகளை நம் உடம்பு ஏற்க வேண்டும் என்றால் வைட்டமின் சி உள்ள உணவுகளும் நம் உடம்பில் வேண்டும். வைட்டமின் சி உள்ள பழங்கள் என்றால் புளிப்பான பழங்கள் அதாவது ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, திராட்சை, ஸ்ட்ராபெரி எல்லாமே.
இதேப்போல் போலிக் ஆசிட் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள்கூட தேவைப்படுகிறது நம் உடலுக்கு. அது என்ன என்றால் கீரைகள், வாழைப்பழம், பீட்ரூட், சுண்டல். இது எல்லாம் நம்ம தினமும் சாப்பிடக்கூடிய உணவுதான். இது எல்லாம் நம்ம தினமும் சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
இவை எல்லாம் நம்ம தினமும் சாப்பிட்டு வந்தாலும் கூட ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கவில்லை என்றால் இரும்புச்சத்து நம்ம உடம்புல சேர்வதை தடை செய்யக்கூடிய சில உணவுகள் இருக்கின்றன. அவை என்ன என்றால் காபி, டீ, கோலா, ஒயின், பியர், இது எல்லாமே நம் உடம்பில் இரத்ததின் அளவு அல்லது ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை தடுக்கும். எனவே இந்த உணவுகளை கண்டிப்பாக தடுத்தே ஆக வேண்டும்.
இரத்ததிற்கு சிவப்பு நிறம் கொடுப்பதே ஹீமோகுளோபின்தான். ஹீமோகுளோபின் என்பது தாராளமான இரும்புச்சத்து இருக்கிற புரோட்டின், சிவப்பு இரத்த அனுக்களுக்கு உள்ள இருக்கிறது. ஆண்களுக்கு இதோட அளவு 14-18 கிராம்/டெசி லிட்டர் இருக்க வேண்டும். பெண்களுக்கு 12-16 கிராம்/டெசி லிட்டர் இந்த அளவிற்கு வேண்டும். இதை விட குறைவாக இருந்தால்தான் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்னு சொல்வாங்க. கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு கண்டிப்பா உதவியாக இருக்கும்.
Discussion about this post