நடிகர் விஜய் தனது தலைவா படத்திற்கு பின்னர் அதிகளவில் சமூக கருத்துக்களை கொண்ட படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக, ஸ்சிலப்பர் செல் என்று பாமரனும் தெரிந்து வகையில் எடுக்கப்பட்ட துப்பாக்கி, விவசாயிகள் பிரச்சினை மற்றும் கார்பரேட் நிறுவனங்களின் சதியை அம்பலப்படுத்திய கத்தி. தொடர்ந்து, ஜல்லிக்கட்டு, மருத்துவ கொள்ளை, ஜி.எஸ்.டி சிக்கல் ஆகியவற்றை பேசிய மெர்சல் போன்ற திரைப்படங்களை கூறலாம். இதில், துப்பாக்கி, கத்தி படங்களை இயக்கியது ஏ.ஆர்.முருகதாஸ் என்பது நாடறிந்த விஷயம்.
இதனைதொடர்ந்து, நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் 3வது முறையாக இணைந்திருப்பது சர்கார். காந்தி ஜெயந்தி நாளான்று பாடல் வெளியான நிலையில், ஆயத பூஜைக்கு சர்கார் படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயிகளின் பிரச்சினையை மையப்படுத்திய கதை, இல்லை இல்லை சுந்தர் பிச்சையின் கதை, அதுவும் இல்லை அரசியல் படம் என சர்கார் படத்தின் கதை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், சர்கார் மத்திய அரசுக்கு எதிராக இருக்கலாம் என்றும் மாநில அரசுக்கு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், பாடல் வெளியிட்டு விழாவில், சர்கார் அரசியல் படம் என நடிகர் விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருந்தனர். இதனால், சர்கார் படம் வெளியாகும் தீபாவளியன்று, அப்படத்திற்கு எதிராக பாஜகவினரோ அல்லது அதிமுகவினரோ போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருக்கலாம். ஏற்கனவே, தலைவா என்ற படத்தின் தலைப்பிற்காக, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நடிகர் விஜய் சிக்கி சின்ன பின்னமானது நினைவிருக்கும். அதுமட்டுமல்ல, மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி குறித்து பேசியதற்காக விஜய்க்கு எதிராக பாஜகவினர் போர் கொடி தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post