இயற்கை, பேராண்மை, ஈ, புறம்போக்கு ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி. ஜனநாதன் அடுத்து, தமிழ் மன்னன் ராஜராஜ சோழன் பற்றிய வரலாற்று படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக, எஸ்.பி.ஜனநாதன், ராஜ ராஜ சோழன் குறித்த ஏராளமான ஆய்வு நூல்களை படித்து வருவதாகவும், அதோடு மட்டுமில்லாமல் தஞ்சையில் தங்கியிருந்து அவர் செய்து வருகிறார். அவர், ராஜராஜ சோழன் படத்தை இரண்டு அல்லது மூன்று பாகமாக உருவாக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எஸ்.பி.ஜனநாதன், ராஜ ராஜ சோழனுக்கு எதிராக படம் இயக்க உள்ளாரா என தமிழ் ஆய்வாளர்களிடமும், தமிழ் உணவாளர்களிடமும் சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால், எஸ்.பி.ஜனநாதன் தமிழராக இருந்தாலும், மார்க்கசிய சிந்தனை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே. ராஜ ராஜ சோழன் குறித்து ஆய்வு செய்தவர்களின் பெரும்பாலானோர் மார்க்கசிய சிந்தனை உடையர்கள் ஆவார்கள்.
அவர்கள் ஆய்வு செய்த பெரும்பாலான நூல்களில், ராஜ ராஜ சோழனுக்கு எதிராகவே அமைந்திருக்கும். குறிப்பாக, ராஜ ராஜ சோழனை சர்வாதிகாரியாகவும், பார்ப்பானியர்கள் ஊக்குவிக்கப்பட்டதாகவும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இருக்கும். ஆனால், தமிழ் ஆய்வாளர்கள் பலரும் ராஜ ராஜ சோழனை சிறந்த மன்னனாகவே எழுதியிருப்பார்கள். அதனால், மார்க்கசிய சிந்தனை உடைய எஸ்.பி.ஜனநாதன் ராஜ ராஜ சோழனுக்கு எதிராக படம் எடுக்கிறாரா என தமிழ் ஆய்வாளர்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
–
Discussion about this post