மருத்துவ குணம் வாய்ந்த இஞ்சியும், தேனும் மட்டும் இதற்கு போதும். இது செய்வதற்கு மிகவும் எளிமையானதும் கூட. இதை எவ்வாறு உபயோகிப்பது என்றும், இதை எவ்வாறு செய்வது என்றும், பார்ப்போம்.
முதலில் இஞ்சியை நன்றாக துருவி கொள்ள வேண்டும். துருவிய இஞ்சியை வெள்ளை துணியில் போட்டு நன்றாக பிளிந்து சாறை எடுத்து கொள்ள வேண்டும். நிறைய சாறு கிடைக்கும். இந்த பிளிந்த சாறை அடுப்பில் வைத்து சூடு செய்து கொள்ள வேண்டும். மிக குறைவான சூட்டில்தான் வைக்க வேண்டும். அந்த சாறை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஒரு ஸ்பூன் அளவிற்கு வற்ற வைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
அடுத்ததாக ஒரு ஸ்பூன் தேன் எடுத்து கொள்ளவும். அதனை இஞ்சி சாறுடன் நன்கு கலந்து கொள்ளவும். மிகவும் நன்றாக ஒரே கலவையாகும் வரை கலந்து கொள்ளவும். இதனை காலை மற்றும் மாலை சாப்பிட்டப் பிறகு சாப்பிட வேண்டும்.
மேலும் வயிற்றில் உள்ள கொழுப்புகள், கொழுப்பினால் ஏற்ப்பட்ட குத்தல், வயறு பெறுத்திருப்பது எல்லாமே குணமாகும். குணமாகும்வரை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக சரியாகி விடும்.
சிறிய வழியில் தயாரிக்கும் மருந்தாக இருப்பினும் பெரிய அளவில் பயனளிக்கிறது. எளிதாக தயாரிக்கும் மருந்து என்பதால் உங்களுக்கு அது ஒரு வேலையாக இருக்காது. இந்த முறை உங்களின் வயிற்றுக்கு மருத்துவம் கொடுப்பதோடு அழகையும் கொடுக்கிறது.
Discussion about this post