ஸ்ட்ரா மூலம் பானங்கலள் அருந்தும் போது அது ஒரு குழாய்ப் போல செயல்ப்படுகிறது. எனவே நாளடைவில் பற்க்களின் எனாமல் பாதிக்கப்படுகிறது. ஸ்ட்ரா பயன்ப்படுத்தும் போது அதன் வழியாக காற்று செரிமான பாதைக்குள் செல்வதால் வாயு மற்றும் வீக்கத்தை உண்டாக்கும்.
வல்லுநர்கள் `ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா’ மூலம் குடிப்பதினால் நமது உடலுக்கு எவ்வளவு தேவை என்ற அளவு தெரியாமலே அள்வுகு அதிகமாக குடிக்கும் நிலை ஏற்ப்படுவதாக கூறுகின்றனர்.
இவ்வாறாக கெடுதலை உண்டாக்கும் ஸ்ட்ராக்ள் பாலிபுரோபிலின் எனும் இராசயணத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய ஸ்ட்ரா மூலம் பருகும் போது அந்த இராசயணம் உடலுக்கு செல்லும் அபாயம் உள்ளது. சிகரெட் பைப் மூலம் குடிக்கும் போது ஏற்படும் கோடுகள் போல ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா மூலம் குடிக்கும் போது சுருக்கம் ஏற்ப்பட வாய்ப்புள்ளது.
இத்தகைய பல கெடுதல் ஏற்ப்படுகின்ற `ப்ளாஸ்டிக் ஸ்ட்ரா’க்களை உபயோகிப்பதை விட நமது இயற்க்கையான உதடுகளை உபயோகிப்பதே மிகவும் நல்லது.
Discussion about this post