சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், முதலமைச்சர் ஆனால் நடிக்க மாட்டேன் எனப் பேசினார். அப்போது ரசிகர்கள் அனைவரும் விஜய்யை தளபதி என அழைத்தனர். இந்நிலையில், திமுக மகளிரணி சார்பில் கலைஞர் வீர வணக்க பொதுக்கூட்டம், மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மைக் பிடித்த திராவிடர் கழக பேச்சாளர் மதிமாறன், திமுக தலைவர் ஸ்டாலினை ஏன் தளபதி என்று அழைக்கின்றோம் என்பதற்கு விளக்கம் கூறினார்.
இதனைதொடர்ந்து பேசிய மதிமாறன், முதலில் எம்.எல்.ஏ ஆனால் தான் முதலமைச்சர் ஆக முடியும் என்ற அறிவே இல்லாமல், படத்தில் பேசி மிஞ்சிப்போன வசனங்களை மேடையில் பேசுபவர்கள் எல்லாம் தளபதி ஆக முடியாது என நடிகர் விஜயை மறைமுக சாடியிருந்தார். இதனால் கொதிப்படைந்த விஜய் ரசிகர்கள், கடந்த 2009 ஆம் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, அப்படுக்கொலைக்கு காரணமாயிருந்த திமுகவும், ஸ்டாலினும் எந்த போராட்டத்தையும் நடத்தவில்லை என்றும், எங்கள் தளபதி விஜய், ரசிகர்களை திரட்டி ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தியதையும் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Discussion about this post