தண்ணீர்
தண்ணீர் வெறும் வயிற்றில் பருகுவது மிகவும் நல்லது. அதுவும் குளிர்ந்த நீராக இருப்பதுதான் மிகவும் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்குதான் அசிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை விட அதிகம் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். இதேப்போல் தினசரி குடிப்பதால் நம் வயிற்றில் உள்ள அமிலத்தின் வீரியத்தை நோக்கி, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க உதவும். தண்ணீர் என்பது அன்றாட வாழ்க்கையின் அவசியமான ஒன்றாகும்.
வெந்தய நீர்
வெந்தயத்தை முதல் நாள் இரவில் நீரில்ப் போட்டு மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் பருகினால் மிகவும் நல்லது. ஆனால் அது உடம்புக்கு மிகவும் தனுப்பு என்பதால் மோருடன் சேர்த்து சாப்பிட கூடாது. ஏனெனில் அது சளி மற்றும் வயிற்றுப்போக்கை உண்டாக்கிவிடும். நீரில் ஊறப்போடாத வெந்தயத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது செரிமான பிரச்சனையை ஏற்ப்படுத்தி விடும். அதாவது அதன் மேல் உள்ள உறை செரிமானம் ஆகாமல் மலச்சிக்கல் உண்டாகிவிடும்.
அருகம்புல் சாறு
அருகம்புல்லின் தண்டு மிகவும் மருத்துவ குணம் உள்ளது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனை பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால் வயிற்றுப்போக்கை ஏற்ப்படுத்தும்.
அருகம்புல் பொடி கடைகளில் விற்கப்படும். அதை உபயோகப்படுத்துவது உடலுக்கு உகந்தது அல்ல. வீட்டிலேயே அருகம்புல் செடியை வளர்த்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
இவ்வாறாக வெறும் வயிற்றில் சாப்பிடும் தண்ணீர், வெந்தய நீர், அருகம்புல் சாறு ஆகிய மூன்றும் தினமும் எடுத்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.
Discussion about this post