அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்திலிருந்து முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அஜித்- சிவா கூட்டணியில் நான்காவது படமாக உருவாகிவரும் படம் விஸ்வாசம். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு இல்லை என பின் உறுதி செய்யப்பட்டது. தற்போது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம்பெற்ற நிலையில் தற்போது இப்படத்தில் தனக்கான டப்பிங் பணியைத் தொடங்கியுள்ளார் நடிகர் அஜித். இதனால் விரைவிலேயே டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியிடப்படலாம் என எதிர்பார்த்துக் காத்துள்ளனர் ரசிகர்கள். அதேபோல முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானின் பாடல்களின் மீதும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
விஸ்வாசம் டப்பிங் பணிகள் நடந்துவரும் நிலையில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் தெலுங்கு டப்பிங்கும் தற்போது மும்முரமாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post