பெண்களின் அழகே அவர்களின் நீளமான கூந்தல்தான். வெட்டுவதும், கலர் செய்வதும், ஜெல் தடவுவதும் போன்ற பல செயல்களை செய்து கூந்தலின் அழகை கெடுத்துவிடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் க்ஷாம்பு மற்றும் பல விதமான எண்ணெய்களையும் தடவி முடியின் அழகை கெடுத்து விடுகிறார்கள்.
தேங்காய் எண்ணெய்
புதிது புதிதாக எண்ணெய்களை உபயோகிப்பதை விட தேங்காய் எண்ணெய்யை தலைக்கு உபயோகிப்பது சிறந்த ஒன்றாகும்.
தேங்காய் எண்ணெய்யை தலைக்கு தேய்ப்பது மட்டுமில்லாமல் தலைக்கு தேங்காய் எண்ணெய்யை வைத்து க்ஷாம்பு உபயோகிக்காமல் குளித்து வந்தால் கூந்தல் பட்டு போன்று மென்மையாக பொலிவுடன் இருக்கும்.
செம்பருத்தி
பல விதமான க்ஷாம்புகள் உபயோகிப்பதற்கு பதிலாக செம்பருத்தி பூவை அரைத்து சீகைக்காயைப் போல தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடிகள் கொட்டாமல் ஆரோக்கியத்துடன் இருக்கும். க்ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை உபயோகிப்பது மிகவும் நல்லது.
கறிவேப்பிலை
பல பேருக்கு பொடுகு தொல்லை என்பது ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இதற்கு பெரிய தீர்வு கறிவேப்பிலை. தினமும் இரவு படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வாருங்கள். கட்டாயம் பொடுகு தொல்லை நீங்கி முடி கொட்டும் பிரச்சனையும் நீங்கி விடும்.
கருமையான, அடர்த்தியான, நீளமான கூந்தல்தான் பெண்களின் அழகு என்பதை மறந்து விடாதீர்கள்.
Discussion about this post