இட்லி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது. இதற்கு எண்ணெய்யும் சேர்க்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட பாரம்பரிய உணவான இட்லியையும் தோசையையும் சாப்பிடுவதற்காக இந்த காலத்து மக்கள் மாவை வீட்டிலேயே தயாரிக்காமல் இன்ஸ்ட்ண்ட் இட்லி மாவு வாங்கி உபயோகிக்கிறார்கள். இப்படிப்பட்ட இன்ஸ்ட்ண்ட் இட்லி மாவு ஆரோக்கியத்துக்கு பாதிப்பு உண்டாக்குகிறது.
பண்டையக்கால ஆட்டுக்கல் எல்லாம் கிரைண்டர் வந்தப்பிறகு காட்சிப்பொருளாகத்தான் இருகிறது. பலப்பேர் வீட்டில் அதுகூட இல்லாமல் இருந்து வருகிறது. அவ்வாறு புதிதாக அறிமுகமான கிரைண்டரும் பல விதமான மாடல்களில் இருந்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு ஏற்ற வகையில் காணப்படுகிறது. அப்படிப்பட்ட கிரைண்டர்களையே அரைப்பதற்கு இன்றையக் காலக்கட்டத்தில் நேரமின்மையினாலும் சோம்பேறித்தனத்தினாலும் நாம் தினந்தோறும் இன்ஸ்ட்ண்ட் மாவையே உபயோகித்து வருகிறோம்.
ஈகோலி பாக்டீரியா
நம்முடைய வீட்டில் எதுவாக இருந்தாலும் நாம் சுத்தமாக பயன்ப்படுத்தி தானே பழக்கம். அதேப்போல் தான் கிரைண்டரையும் அரைத்து முடித்தவுடன் சுத்தமான நீரால் கழுவுவோம். ஆனால் எத்தனை கடைகளில் அவ்வாறு கழுவுகிறார்கள். அதுவும் சுத்தமான நீரில் கழுவுகிறார்கள் என்று உங்களுக்கு எவ்வாறு தெரியும்? அப்படி சுத்தமான நீரில் கழுவவில்லை என்றால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? அங்குதான் உருவாகிறது ஈகோலி பாக்டீரியா. இந்த ஈகோலி என்னும் பக்டீரியாவின் தாக்கம் அதிகமாக ஏற்படும். இது மாவாட்டுகின்ற போது இட்லி தோசை மாவிலேயே தங்கி விடும். இந்த ஈகோலி என்னும் பாக்டீரியா மாவை வேக வைத்தாலும் கூட முழுமையாக அழிவதில்லை.
இந்த ஈகோலி பாக்டீரியாவால் நாள்ப்பட்ட வயிற்று வலி, உடல் வறட்சி, வாந்தி, மயக்கம், இரைப்பை நோய், தலை சுற்றுதல் ஆகிய உடல் நல அபாயங்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் நிறையவே உள்ளது. கடைகளில் நாம் வாங்குகின்ற மாவினால் ஏற்ப்படுகின்ற இந்த பிரச்சனையை விட அதிகமானது பாக்கெட்டில் அடைக்கப்படுகின்ற இன்ஸ்ட்ண்ட் மாவு. இன்ஸ்ட்ண்ட் இட்லி மாவு மிக வேகமாக கெட்டுப்போகக் கூடியது. அத்ற்க்காக கால்சியம் சிலிகேட் சேர்க்கின்றனர். இதனால் மாவு சீக்கிரம் கெட்டுப்போகாது. இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும். மேலும் அஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்றுவலி போன்றவை உண்டாகும்.
விலை குறைவு என கடையில் இன்ஸ்ட்ண்ட் இட்லி மாவு வாங்குவதை தவிர்த்து விட்டு வீட்டில் உள்ள மாவையே உபயோகிங்கள். நமது உடல்நலம் நமது கையில் விலை கொடுத்து வாங்காதீர்கள்.
Discussion about this post