அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணிர் ஊற்றி வைத்து அதில் ஒரு எலுமிச்சையை வெட்டி போட்டு புளியையும் நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் பித்தளை விளக்கை தண்ணிர் ஊற்றி கொதிக்க வைத்த பாத்திரத்துக்குள் போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் கொதித்து கொண்டிருக்கும் போது ஒரு 4 மூடி வினிகர் ஊற்ற வேண்டும். வினிகர் ஊற்றிய பிறகும் ஒரு 20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
அதற்கு பின்னர் அடுப்பை அனைத்து விட வேண்டும். பித்தளை விளக்கு கொதிக்க வைத்த தண்ணிர் ஆறிய பிறகு விளக்கை எடுக்க வேண்டும். அத்தகைய விளக்கில் உள்ள அழுக்குகளும் ஒன்றுவிடாமல் நீங்கி விடும். பின்னர் நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.
சாதரணமாக பித்தளை விளக்கு தெய்ப்பதற்கு புளி, ச்ங்கல் பொடி, எலுமிச்சை, என பலவற்றை வைத்து கக்ஷ்டப்பட்டு தேய்த்தால்தான் ஓரங்களில் உள்ள எண்ணெய்கள், அழுக்குகள் நீங்கும். ஆனால் இந்த வழி ஈசியானது. இதை நம் கையில் தொடாமலே இவ்வளவு ஈசியாக கழுவி விட முடியும்.
அத்தகைய பித்தளை விளக்கில் ஒரு துளி கருப்பு, எண்ணெய் போன்றவை இருக்காது. அவ்வளவு சுத்தமாக இருக்கும். எல்லாரும் பொதுவாக செவ்வாய் மற்றும் வியாழன் மட்டும்தான் விளக்கு கழுவுவோம் என்று சாஸ்திரம் சொல்லுது. அதுதான் நல்லதும் கூட.கண்டிப்பா முயற்சி செய்து பாருங்கள்.
Discussion about this post