இந்திய திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில், சட்டிஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வீனா சென்ரே என்ற திருநங்கை முதல் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.
முன்னாள் சட்டிஸ்கர் பட்டத்தை வென்றுள்ள இவர் ராய்ப்பூரின் மந்திர் ஹசுத் பகுதியில் வசித்து வருகிறார். இவருடன் போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த நமிதா அம்முவை தோற்கடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “சிறு வயதிலிருந்தே மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டிருந்தேன். என்னுடன் பழக யாரும் விரும்பமாட்டார்கள். என்னை வைத்து அனைவரும் கேலி செய்வார்கள்” என்றார்.
மேலும், தனது பள்ளிப்படிப்பை 5ஆம் வகுப்போடு நிறுத்திய இவர் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்புடன் இருந்துள்ளார்.
இவர், லக்னோ மற்றும் பெங்களூரு என பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ‘ரேம்ப் வாக்’களில் பங்கு பெற்றுள்ளார்.
இவரது இந்த சாதனை, தனது அடையாளத்திற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் போராடி வரும் திருநங்கைகளுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும் என நம்பப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
Discussion about this post