லைகா நிறுவன தயாரிப்பில் சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 2.0 படத்திற்கான பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை லண்டனில் நடைபெற்று வந்தது. இப்படத்திற்கு பல வெளிநாட்டு இசைக்கலைஞர்களை பயன்படுத்தியதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்த படத்திற்கு இசைமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.2.0 படத்திற்கு மிகப்பெரிய அளவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சம்பளம் வழங்கப்பட்டதாக திரையுலக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. 2.0 நவம்பர் 29ஆம் தேதிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post