பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். `2008-ம் ஆண்டு, `ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்திப் படத்தில், `Nathni Utaro’ என்ற பாடலுக்கு நடனம் ஆட நான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது நானா படேகர் தவறாக நடக்க முயன்றதாகவும் தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டியுள்ளார்.
மேலும், நடனம் ஆட கற்றுக்கொடுப்பது போல் தகாத இடங்களில் கை வைத்தார் எனவும் தனுஸ்ரீ தத்தா கூறினார். இந்த குற்றச்சாட்டு பாலிவுட் திரையுலகில் மட்டுமில்லாமல், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என அனைத்து வுட்களிலும் ஹிட் அடித்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நானா படேகர், 10 வருடத்துக்கு முன்னர் எது உண்மையோ அதுதான், இப்பவும் நீடிக்கிறது. அதுதான் எதிர்காலத்திலும் உண்மையாக இருக்கும் என்ற ஒற்றை வரியுடன் முடித்துக்கொண்டார்.
Discussion about this post