கோலிவுட்டில் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன். சீமராஜா படத்தை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து அனு என்ற வெள்ளை நிற பெண் புலியை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். மேலும், தத்தெடுக்கும் நிகழ்ச்சிக்காக ரூ.2.12 லட்சம் கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், விலங்குகளை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை என்றும் 174 வகை இனங்களில் ஒன்றை தத்தெடுக்க பொதுமக்கள் தாமாக முன் வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post