கல்யான வீடு அல்லது பார்ட்டி என எங்கயாவது செல்ல வேண்டும் என்றால் பியூட்டி பார்லர் சென்று பேசியல் செய்துவிட்டுதான் செல்வோம். ஆனால் அது சிறிது நேரத்தில் முகம் வாடிப் போய்விடும். ஆனால் இந்த முறை இன்ஸ்டண்ட்டாக இருந்தாலும் நீண்ட நேரம் பொலிவு நீடிக்கும். மேலும் உங்கள் நேரமும் காசும் மிச்சமாகும்.
இந்த முறையில் எந்தவித பாதிப்பும் இருக்காது. வீட்டிலுள்ள எளிய பொருட்களை வைத்து இந்த பேக்கினை செய்யலாம். இந்த பேக் போட்டால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு பொலிவுடன் காணப்படுவீர்கள். கண்ணாடியை பார்த்து அசந்து போய்விடுவீர்கள்.
ஒரு சுத்தமான் பவுலில் 2 டேபிள் ஸ்பூன் கடலைமாவு எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் 1/2 ஸ்பூன் மஞ்சளையும் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் 2 ஸ்பூன் பாலை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும் ரோஸ் வாட்டரையும் அதனுடன் 2 ஸ்பூன் சேர்த்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நல்ல ஒரு கலவையாகும் வரை நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்த பிறகு இந்த பேக்கினை முகத்தில் போட்டு விட வேண்டும். முகத்தில் போடும் போது இன்ஸ்டண்ட்டாகவே உங்களுக்கு பொலிவு ஏற்படும். இதனை போட்டு 15 நிமிட்ம் கழித்து இதனை சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனை முகத்தில் போடும் முன்னரே முகத்தையும் சுத்தமான நீரில் நன்றாக கழுவியிருக்க வேண்டும். அவ்வாறு கழுவி விட்டுதான் அந்த பேக்கினை போட வேண்டும். உங்களுக்கு எப்பவுமே போலிவு வேண்டும் என்றால் 2,3 தடவை போடுங்கள். இல்லை என்றால் பார்ட்டி டைம் மட்டும் போட்டால் போதும்.
Discussion about this post