உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்குதா? இதோ நிவாரணம் அளிக்கும் ஜூஸ்கள்
மலச்சிக்கல் பிரச்சனை என்பது பலரிடம் இருந்து கொண்டுதான் வருகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் வயறு மாந்தம் போல ஊதி கொண்டு காணப்படும். மேலும் எந்த ஒரு உணவும் உட்கொள்ளவும் விருப்பம் இருக்காது. இதுமட்டும்மில்லாமல் வாயுத் தொல்லையும் ஏற்படும். மலச்சிக்கல் பிரச்சனை அடிக்கடி வருவது உடம்புக்கு நல்லது இல்லை.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு பல மருந்துகள் கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாம் உபயோகிப்பதை விட பக்க விளைவுகள் இல்லாத இயற்க்கை வழிகளை பின்பற்றுவதே நல்லது.
ஜூஸ்களில் கனிமச்சத்துக்கள், வைட்ட்மின்கள், மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும் ஜூஸ்களில் நீர்ச்சத்து சிறப்பான அளவில் இருப்பதோடு உடலுக்கு தேவையான நார்ச்சத்தும் கிடைக்கிறது. நார்ச்சத்து மலம் இறுக்கம் அடையாமல் அதில் நீரை தக்க வைத்து மென்மையாக்குகிறது. இதனால் குடலிறக்கம் சிறப்பாக செயல்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கப் ஜூஸை பருகினாலே போதும். ஜூஸை தயாரிக்கும் போது அதனை கூழ் வடிவில் எடுக்க வேண்டும் அதில் சர்க்கரை சேர்க்கக்கூடாது. ஜீரகப்பொடி அல்லது சோம்பு பொடி சேர்த்து குடியுங்கள். இதனால் உடலில் உள்ள டாக்சின்கள் வெளியேறும். மேலும் ஜூஸை அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகுவதே சிறந்தது.
ஜூஸ் தயாரிக்கும் முறைகள்
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் 1, தண்ணீர் ½ கப், சோம்பு பொடி ½ டீஸ்பூன், சேர்த்து ஆப்பிள் ஜூஸை குடிப்பதுதான் சரியான முறையாகும்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ½, வெதுவெதுப்பான நீர் 1கப், தேன் 1 டீஸ்பூன், ஜீரகபொடி ½ டீஸ்பூன் சேர்த்து எலுமிச்சை ஜூஸை குடிப்பதுதான் சரியான முறையாகும்.
ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு 1கப், பிளாக் சால்ட் 1சிட்டிகை மட்டுமே ஆரஞ்சுஜூஸ் குடிப்பதற்கு உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
உலர் முந்திரிப்பழம் ஜூஸ்
உலர் முந்திரிப்பழம் 5-6 , தேன் 1/2 டீஸ்பூன், ஜீரகப்பொடி 1/2 டீஸ்பூன், வெதுவெதுப்பான நீர் 1/2கப், இதில் உலர் முந்திரிப்பழங்களை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் குடிக்க வேண்டும்.
பேரிக்காய் ஜூஸ்
பேரிக்காய் -2, எலுமிச்சை-2,பிளாக் சால்ட்-1 சிட்டிகை கலந்து குடிக்கவும்
பழங்களில் உள்ள சர்க்கரை பழச்சாறுகளில் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். எனவே சர்க்கரை நோயாளிகள் மலச்சிக்கல் எற்ப்பட்டால் பழச்சாறு பருகுவதை தவிர்ப்பது நல்லது.
Discussion about this post