ஆண்ட்ரியா என்று சொன்னலே பலபேருக்கு தெரியும் ஒரு பாடகி ஒரு நடிகை என பல திறமை கொண்டவர் என்று.ஆண்ட்ரியாவின் நடிப்பு திறனாலும் இசைத்திறமையாலும் பலரை தன் பக்கம் ஈர்த்தவர்.மேலும் அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுதும் திறனுடையவர்.மேலும் தமிழில் பலப் பாடல்களை பாடி அணைவரையும் தன் பாட்டு திறமையால் ஈர்த்தவர்.எழுதும் திறனுடையவர்.
தமிழில் பலப் பாடல்களை தானே எழுதி மற்றும் பாடி வெளியிட்டுள்ளார்.ஆனால் தற்போது முதன் முதலாக ஒரு ஆல்பத்தை இயக்கி அதில் தானே எழுதி, நடித்து பாடி வெளியிட்டுள்ளார். காதல் தோல்வியான ஒரு பெண்ணின் ஏக்கத்தையும்,அப்பெண்ணின் சுதந்திர உணர்வும் கொண்டு பாடுவதாக இந்த வீடியோ ஆல்பம் பாடல் அமைந்துள்ளது.
லியான் ஜேம்ஸ் இதற்கு இசையமைத்துள்ளார். கெபா ஜெரிமியா என்ற இளைஞர் ஆண்ட்ரியாவுடன் ஆல்பத்தில் நடித்துள்ளார்.யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ள இந்தப்பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இசைக்கு மயங்காதவர் எவரும் இலர் என்ற வார்த்தைக்கு இணங்க தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.
Discussion about this post