இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீப காலமாக பலபடங்களில் நடித்து வெற்றியை கண்டவர் கீர்த்தி சுரேஷ் தற்போது சண்டகோழி 2, சர்கார் ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். ஆனாலும் மலையாள படங்களில் தன்னை அறிமுகப்படுத்தியவர் பிரியதர்க்ஷன் என்பதால் அவர் கேட்டதும் மறுக்காமல் ஒப்புக் கொண்டுள்ளார். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால் அவர் சீன நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
16 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்ப்படை தலைவனான குஞ்சலி மரக்கார் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். இவர் பிரிட்டிக்ஷ்காரர்களை தீவிரமாக எதிர்த்தவர். இவருடைய வாழ்க்கை வரலாறு என்பதால் மிகவும் பிரம்மாண்டத்துடனும் ஆர்வத்துடனும் காண்ப்படும் என்று ஆவலுடன் ரசிகர்கள் எதிபார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் குஞ்சலி மரக்கார் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார். அவருடைய இளம் வயது கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரமாக பிரபு நடிக்கிறார். `சிறைச்சாலை’ படத்திற்குப் பிறகு மோகன்லால், பிரபு இருவரும் இந்த படத்தில் இனைந்து நடிக்கின்றனர்.
கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றி திரைப்படமாகதான் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
Discussion about this post