ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்திலிருந்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர். முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கூட்டணியில் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார். சமீபத்தில் இதன் பாடல்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கிவரும் நிலையில் இந்தப் படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் விரைவில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவுக்கு பெரிய அளவிலான மார்க்கெட் இங்கு உள்ளது. மேலும் இப்படம் அரசியல் அரங்கிலும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்பட தமிழ்நாடு திரையரங்க உரிமம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஏரியாவை எல்ஏ சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியாவை ஸியான் ஃபில்ம்ஸ் வாங்கியுள்ளது. மதுரையை பிரவீன் வாங்கியுள்ளார். சுஷ்மா சினி ஆர்ட்ஸ் சேலம் ஏரியாவைக் கைப்பற்றியுள்ளது. சென்னை சிட்டியை அபிராமி மெகா மால் வாங்கியுள்ளது.
தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா மற்றும் ஆமிர் கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் ஆகிய படங்கள் விஜய்யின் சர்காருக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post