குழந்தை சாப்பிடவில்லை என்று கவலைப்படுகின்ற பெற்றோர் நிறையவே இருக்கின்றனர். ஜங்க்ஃபுட்டைதான் அதிகமாக சாப்பிட அடம் பிடிப்பார்கள் என்றும் உடல் நலத்திற்கு ஆபத்தான பாக்கெட் வகை உணவுகளை சாப்பிட அடம்பிடிப்பார்கள் என்றும் பல பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். இது பொதுவாக அனைத்து வீடுகளிளும் நடக்கும் கதைதான்.
அவர்களுக்கு ஊட்டச்சத்து அதிகமுள்ள உனவுகளை பழக்குவது எப்படி என்று தேசிய ஊட்டச்சத்து வார்த்தை முன்னிட்டு ஊட்டச்சத்து நிபுணர் கேஜல் க்ஷீத் சில ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு முதல் ரோல் மாடல் பெற்றோர்கள்தான். பெற்றோரின் நடவடிக்கைதான் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.குடும்பத்துடன் ஒற்றுமையாக சேர்ந்து சாப்பிடும் பழக்கம் வேண்டும். அப்போதுதான் குழந்தைகளும் சாப்பிட பழகுவார்கள்.ஆண்டி ஆக்ஸிடென்ஸ் நிறைந்த பழங்கள் நிறைய சாப்பிட கொடுங்கள்.
காய்கறி,சூப்,ஜுஸ் எல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காய்கறி என்பது குழந்தைகளுக்கு கட்டாயம் தினசரி உணவில் இருக்க வேண்டும். ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வீட்டில் இருக்கலாம். குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள் எனவே குழந்தைகளை கவரும் விதத்தில் கலர் புல்லாக உணவு பரிமாருங்கள். குழந்தைகளிடம் அடம்பிடிக்கும் பழக்கம் அதிகமாக உண்டு. அவ்வாறு ஜங்க்ஃபுட் தான் என்று அடம்பிடித்தால் கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது. கொஞ்சம் கொஞ்சமாக அடம் பிடிப்பதை அவர்களே நிறுத்தி விடுவார்கள். சாப்பிட மறுத்தால் குழ்ந்தையை கட்டாயப்படுத்தாதீர்கள்.பசியோடு இருக்கும் நேரத்தில் புது உணவுகளை அறிமுகப்படுத்துங்கள்.சாப்பிடவில்லை என்றால் ருசியான மாற்று உணவுகளை கொடுத்து முயற்சி செய்யலாம் என்கிறார் கேஜல் க்ஷீத்.
குழந்தைகளை சாப்பாட்டை கவர வைப்பதும் சாப்ப்பிட வைப்பதும் அவரவர் பெற்றோர் கைகளிலே.
Discussion about this post