ஒருவரின் உடல்நிலையில் அமிலம்(ஆசிட்) 3.5 அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு மேல் இருக்க கூடாது. காரம் (ஆல்கலைன்) 7.35 அளவு மற்றும் அதற்கு மேல் இருக்கலாம். ஆனால் அதற்கு குறைவாக இருக்க கூடாது. ஒருவரின் உடல்நிலையினை இதன் மூலம் அறியலாம்.நாம் எடுக்கும் உணவின் தன்மை அறிந்து உண்பதால் பல நோய்களிலிருந்து நம்மை காக்கலாம்.
முதலில் அமிலத்தன்மை நிறைந்த உணவு, நமது உடலில் அமிலத்தன்மை அதிகமாவதால் ஏற்ப்படும் செரிமானக் கோளாறு மற்றும் பல வகையான நோய்களுக்கு காரணமாக உள்ளது. இருதய நோய், வறட்சி, சர்க்கரை வியாதி, ஒபிசிட்டி, தலைவலி, மந்தமான நிலை, போன்றவை உண்டாகும். ஏன் அமிலத்தன்மை அதிகம் ஆனால் புற்றுநோய் கூட உண்டாகும்.
காரத்தன்மை (ஆல்கலைன்) நிறைந்த உணவு எதிர்பாராத விதமாக மிக ந்ன்மை செய்கிறது. கூடுதலான அமிலத்தன்மை நிறைந்த உணவினால் ஏற்ப்பட்ட நோய்களை குணப்படுத்த ஆல்கலைன் நிறைந்த உணவு உதவுகிறது. இந்த ஆல்கலைன் நிறைந்த உணவு தற்போதைய பிரச்சனையாக உள்ள அனைத்து நோய்களுமான கிட்னி பிரச்சனை,அசிடிட்டி, சர்க்கரை வியாதி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்பு, மூளை, இருதயம், நோய்களை குணப்படுத்த உதவும். இது அறிவியல் மூலமாக நிரூபிக்கப்பட்டது. இது புற்றுநோயை குணப்படுத்தவும் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.
அமிலத்தன்மை நிறைந்த உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உனவுகள், ஆல்கஹால், பால், காபி, முட்டை, சீனி, பாஸ்தா, மைதா, ஐஸ்கீரிம், கேக், சோடா, வெள்ளை அரிசி, சிக்கன், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, எண்ணெய் இவை அனைத்தும் அமிலத்தன்மை நிறைந்த உணவுகள்தான். இவை அனைத்தும் உடம்புக்கு கேடு விளைவிக்கும்.
காரத்தன்மை நிறைந்த உணவுகள்
பழங்கள், காய்கறிகள், பச்சை காய்கறிகள், நாட்டுச்சர்க்கரை, தேன், கைகுத்தல் அரிசி, தாணியம், பாதாம், முந்திரி, பிஸ்தா, தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில் இவை அனைத்தும் காரத்தன்மை (ஆல்கலைன்) நிறைந்த உணவுகள். இவை அனைத்தும் உடம்புக்கு நன்மையை மட்டும்தான் தரும். எலுமிச்சை அமிலத்தன்மை நிறைந்தது ஆனால் அது உணவாக உண்ணும் போது ஆல்கலைன் ஆகிவிடும்.
இனி வரும் காலத்தில் ஆல்கலைன் டயட் எல்லாருக்கும் தேவைப்படுகிறது. ஆல்கலைன் உணவுகள் அனைத்துமே நமது முன்னோர்கள் பயன்படுத்தியவை.
Discussion about this post