பேட்ட படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த்-பா.இரஞ்சித் கூட்டணியில் காலா படம் வெளியானதையடுத்து ரஜினிகாந்த்- ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O படப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இப்படம் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் தற்போது நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.
விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், நவாஸுதின் சித்திக் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துவரும் வேளையில் தற்போது இயக்குநர் மகேந்திரனும் பேட்ட படத்தில் இணைந்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ரஜினிகாந்துக்கு மிகவும் ஃபேவரிட்டான இயக்குநர்களுள் ஒருவராக அறியப்படும் மகேந்திரன் இதில் இணைந்திருப்பதால் ரசிகர்களிடம் தற்போது புதிய கவனம் பெற்றுள்ளது பேட்ட. ரஜினி நடித்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேந்திரன் ரஜினியுடன் இப்போதுதான் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்.
முன்னதாக விஜய் நடித்திருந்த தெறி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்துக் கவனம்பெற்ற மகேந்திரன், உதயநிதி நடித்திருந்த நிமிர் படத்தில் சமீபத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post