கருப்பு சாக்லேட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மாதம் மூன்று சாக்லேட்டுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பின் அளவு 13 சதவீதம் குறைவாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சாக்லேட்டில்உள்ள கோகோவில் இருக்கும் இயற்கை மூலப்பொருட்கள் ரத்த குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதேபோல் இதயத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சாக்லேட்டில் உள்ள பிளவனாய்டுகள் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், ரத்த குழாய்களின் வீக்கத்தை கட்டுப் படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது.
குறிப்பாககருப்பு நிற சாக்லேட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. அதில் இருக்கும் கோகோ உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை விளைவிக்கிறது. அதில் சர்க்கரையின் அளவும் சீராக இருக்கிறது. நாம் சாப்பிடும் சாக்லேட்டில் குறைந்தபட்சம் 75 சதவீதம் கோகோ உள்ளடங்கி இருக்க வேண்டும். அத்தகைய சாக்லேட்டுகளை சாப்பிடுவதுதான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
ரத்தஓட்டம் சீராக நடை பெற, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு கருப்பு சாக்லேட் சாப்பிடலாம். 100 கிராம் கருப்பு சாக்லேட்டில் 75 முதல் 85 சதவீதம் வரை மெக்னீசியம், தாமிரம், இரும்பு, மாங்கனீஷ், பாஸ்பரஸ், பொட்டாசியம், சீலியம், தாதுக்கள் உள்ளிட்ட கோகோ மூலப்பொருட்கள் இருக்கின்றன. அதேபோல் இதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் டாக்டர்களிடம் கலந்தாலோசித்துவிட்டு சாக்லேட் சாப்பிட வேண்டும்.
Discussion about this post