குளிப்பதற்கென்று ஆயுர்வேத மருத்துவத்தில் சில முக்கியமான வழிமுறைகள் இருப்பது நம்முள் பலருக்கு தெரியாது. குளியலே ஒரு சிகிச்சைதான் என்பதையும் நாம் அறிந்திருக்க மாட்டோம். குறிப்பாக ஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. அது என்னவெனில்
” பொதுவாக நம்முடைய உடல் சூடு பாதத்திலிருந்து மெல்லமெல்ல மேலே சென்று தலையில் உள்ள கண், காது, வாய், மூக்கு வழியாக வெளியேறுகிறது. அதனால்தான் குளிக்கும்போது முதலில் பாதத்தில் தண்ணீரை ஊற்றி, பின்பு மெல்லமெல்ல முழங்கால்கள், தொடைப்பகுதி, இடுப்பு, மார்பு, கழுத்து என்று தண்ணீரால் நனைத்து இறுதியாக உச்சந்தலையில் தண்ணீரை ஊற்றுகிறோம்.
குளக்கரை மற்றும் ஆற்றங்கரையில் படிக்கட்டுகளின் வழியாக மெல்ல மெல்ல உடலை நனைத்து குளிக்கும் முறையும் இதனை அடிப்படையாகக் கொண்டதுதான். ஷவர் பாத் மேற்கொள்கிறபோது இதிலிருந்து மாறுபட்டு நேரடியாக உச்சந்தலையில் தண்ணீர் இறங்குகிறது. இதன் மூலம் உடற்சூடு உடலினுள்ளே இறங்கிவிடுகிறது. இதனால் உடல் சூடு உடலிலேயே தங்கி மலச்சிக்கல், மனச்சிக்கல், மூலம், உயர் ரத்த அழுத்தம் தூக்கமின்மை, தலைவலி, ஒற்றைத் தலைவலி, அல்சர், ஜீரணமண்டலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனைத் தவிர்க்க ஷவரில் குளிப்பவர்கள் முதலில் பாதம் முதல் தலை வரை தண்ணீரை கொஞ்சம்கொஞ்சமாகப் படும்படி நனைத்துவிட்டு அதன்பிறகே தலையில் தண்ணீர் படும்படி குளிக்க வேண்டும்.
Discussion about this post