கர்ப்பினி பெண்கள் பல உணவு வகைகளைதான் சாப்பிட நினைப்பார்கள். மேலும் அதிகமாகதான் சாப்பிட நினைப்பார்கள். பொதுவாக கர்ப்பினி பெண்கள் ஆசைப்பட்டு சாப்பிட கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் கேட்பதை எல்லாம் செய்து கொடுப்பார்கள். கர்ப்பினி பெண்களும் ஆசைப்படுவதெல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள்.
கர்ப்பினி பெண்கள் அவ்வாறு சாப்பிடுவது தவறு. கர்ப்ப காலத்தில் அவர்களின் உடல் எடை சாதரணமாக இருப்பதை காட்டிலும் 10 கிலோ கூடுதலாக இருக்கலாம். அதற்கு மேல் அதிகரிக்க கூடாது. அவர்கள் எந்த உணவு சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
கர்ப்பினி பெண்கள் டீ, காபி, போன்றவை குடிக்க கூடாது. அவற்றை தொடர்ந்து குடித்தால் இரத்த அழுத்தம் மாறக்கூடும்.
அதிகமான மசாலா பொருட்கள் சேர்த்த காரமுள்ள பொருட்கள் சாப்பிடக்கூடாது. அதேப்போல் துரித உணவுகள், டப்பாக்களில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் பால் போன்றவையும் சாப்பிடக்கூடாது.
இறைச்சி, மற்றும் முட்டை,பால் ஆகிய பொருட்களை பாதி வேட்காட்டில் சாப்பிடக்கூடாது.
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், காலாவதி ஆகியிருந்தால் அவற்றையும் அருந்தக்கூடாது. இது கர்ப்பினி பெண்களை எளிதில் பாதிக்கும்.
வாழைக்காய், உருளைகிழங்கு, இறால்மீன் போன்று உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீர்கள்.
அதிக காரம், சோடியம் கொண்ட ஊறுகாய், ஜாம், ஜெல்லி, பப்படம் போன்ற உணவுகளை சாப்பிட கூடாது.
கர்ப்பினி பெண்கள் நல்ல சாப்பாடு எடுத்து கொள்வது அந்த கருவுக்கும் நல்லது. கண்டிப்பாக மேற்கூறிய உணவுகளை தவிர்த்திடுங்கள். கர்ப்பினி பெண்களின் உடல் ஆரோக்கியமும் கருவின் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம்.
Discussion about this post