சிம்பு நடித்துவரும் புதிய படத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ பட பிரபலம் ஒருவரும் இணைந்துள்ளார்.
மணிரத்னம் இயக்கி சமீபத்தில் வெளியான ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடித்த சிம்பு, தற்போது சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் வெளியான ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் படத்தின் தமிழ் ரீமேக்கான இதில் அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த இரண்டு நாயகிகள் இதில் இணைந்துள்ளதன் வாயிலாக, தனது படமென்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனும் கொள்கைக்கு எந்த பங்கமும் வராமல் பாதுகாத்துக் கொண்டுள்ளார் சுந்தர்.சி.
தான் இயக்கியிருந்த கலகலப்பு -2 திரைப்படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான காமெடி ரோல் கொடுத்திருந்த நிலையில் இந்தப் படத்திலும் யோகி பாபுவை இணைத்துக்கொண்டுள்ளார் சுந்தர். சி. இந்த நிலையில் இந்தப் படத்தில் இன்னொரு நடிகரும் தற்போது இணைந்துள்ளார். அவர் வேறு யாருமல்ல நடிகர் மஹத்தான்.
சமீபத்தில் பிக் பாஸ் சீஸன்-2வில் கலந்துகொண்ட மஹத் பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் தொடர்ச்சியாகச் சில நிகழ்ச்சிகளில் சிம்புவைச் சந்தித்துவந்த அவர், தற்போது சிம்புவின் படத்திற்குள்ளேயே ஐக்கியமாகியுள்ளார். சிம்புவுடன் மஹத் தற்போது இணைந்தாலும் இவர்கள் இணைவது முதன்முறை அல்ல. சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் (AAA) எனும் படத்தில் ஏற்கெனவே இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post