நடிகை தப்ஸி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிக் கவனம் பெற்றுவருகிறது.
தமிழில் சில படங்களில் மட்டுமே அவ்வப்போது தலைகாட்டிவரும் நடிகை தப்ஸி, இந்தியில் பிஸியாகவே நடித்து வருகிறார். இந்த நிலையில் தமிழில் மீண்டும் ஃபார்மிற்கு வரும் விதமாகக் கதாநாயகியை முன்னிலைப்படுத்திய படமொன்றில் நடிக்கவுள்ளார் தப்ஸி. நயன்தாரா முன்னிலைக் கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இதை இயக்குகிறார்.
ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கும் நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று (அக்டோபர் 10) வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் படத்துக்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் தப்ஸி அமர்ந்திருப்பதுபோல காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகவுள்ள நிலையில் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 11) தொடங்குகிறது.
Discussion about this post