ஆரண்யகாண்டம் படத்தை தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம், சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, சமந்தா, பஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு: நீரவ்ஷா, பி.எஸ்.வினோத். இசை, யுவன்சங்கர்ராஜா. திரைக்கதை: மிஷ்கின், நலன் குமாரசாமி, அலிபாபா இயக்குனர் நீலன் கே.சேகர். படம் குறித்து தியாகராஜன் குமாரராஜா கூறியதாவது: ஆரண்யா காண்டம் ரிலீசாகி 8 வருடங்கள் ஆகிறது. சூப்பர் டீலக்ஸ் கதையை எந்த கோணத்திலும் சொல்ல முடியாது.
இது 13 தனித்தனி கேரக்டர்களின் குணாதிசயங்களை உள்ளடக்கிய படம். ஷில்பா என்ற திருநங்கயைாக விஜய் சேதுபதி நடிக்கிறார். வேறொரு நடிகருக்காக எழுதிய இந்த கதையை விஜய் சேதுபதியிடம் சொன்னபோது, ‘உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். அவரும், துணை நடிகர், நடிகைகளும் நடித்த ஒரு ஷாட்டை மட்டும் 3 நாட்கள் படமாக்கினேன்.
விஜய் சேதுபதி முகம் சுளிக்காமல் நடித்தார். அதுபோல், ரம்யா கிருஷ்ணன் நடித்த ஒரு ஷாட்டை 80 டேக்குகள் படமாக்கினேன். அவரும் சளைக்காமல் நடித்தார். முதலில் இந்த கேரக்டரில் நதியா நடித்தார். 2 நாட்கள் படமாக்கினேன். ஆனால், ரீடேக் என்றதும் பொறுமை இழந்த அவர், ‘நண்பர்களாக இருப்போம். இதற்கு மேல் என்னால் சிறப்பாக நடிக்க முடியாது’ என்று, சுமூகமாக பேசி படத்தில் இருந்து விலகினார். பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தமானார்.
Discussion about this post