மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் வெறும் 20 நிமிட காட்சிக்காக நடிக்க இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் ரூ.1 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி. ராமாராவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராகி வருகிறது. இரண்டு பாகங்களாக தயாராகி வரும் இந்த படத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தனது தந்தையின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வித்யா பாலன், ராணா என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ள இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரமும் காட்டப்படுகிறது.
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ரகுல் ப்ரீத் சிங், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவுடன் ரகுல் ப்ரீத் சிங் ஆடும் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதையும், பாலகிருஷ்ணா உடன் டூயட் ஆடும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரகுல் ப்ரீத் சிங் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே ஸ்ரீதேவியின் கதாபாத்திரம் படத்தில் காட்டப்படுகிறது. இதற்கான ராகுல் ப்ரீத் சிங்-க்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது வரை நான் நடித்ததிலேயே மிகப்பெரிய சவாலான கதாபாத்திரம் இது. ஸ்ரீதேவியை போன்ற ஒரு ஆளுமையின் பாத்திரத்தில் நடிப்பதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ரசிகர்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்” என ரகுல் ப்ரீத் சிங் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தின் நடிப்பது குறித்து கூறியுள்ளார்.
Discussion about this post