படம் ஆரம்பிக்கும்போதே திடீர் திடீரென்று காணாமல் போகும் பள்ளி மாணவிகள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஆசிரியர் என்ற போர்வையில் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் காமவெறியனா? காதலன் என்ற பெயரில் தூண்டில்போடும் நம்பிக்கை துரோகனா? என்ற இன்வெஸ்டிகேஷன் ரேசிங்கில் யார் என்று கண்டுபிடிக்கப் பட்டபிறகும் திரைக்கதை செம்ம ஸ்பீடில் சேசிங் ஆகிறது. க்ளைமாக்ஸில் அந்த சைக்கோ ராட்ச ‘சன்’ என ட்விஸ்ட் அடிக்கும்போதுதான் இயக்குனர் ஏமாற்றவில்லை. ஆடியன்ஸ் யூகிக்கமுடியாத க்ளைமாக்ஸாக காண்பித்து ஸ்க்ரீன் ப்ளேயில் விளையாடிக்கிறார் இயக்குனர் ‘கேம்’குமார் சாரி… ராம்குமார்
“ஓப்பனிங் சீன்லேயே ‘ரேப்’ இல்லை என்று தடயவியல்துறை பேராசிரியராக வரும் நிழல்கள் ரவி மூலம் சொல்லி விட்டதை கவனிக்காதவர்கள் ரேப்பிஸ்ட் ஆசிரியன்தான் அந்த சைக்கோ கொலையாளி என்று பட படப்போடு பார்த்துக்கொண்டிருப்பீர்கள். படத்தின் தலைப்பே ‘ராட்சசன்’ என்று ஆணை குறிக்கிறது. அப்படியிருக்க, பெண் எப்படி அந்த சைக்கோ கொலையாளியாக இருக்கமுடியும்? எல்லாவற்றையும் ஏற்கனவே சொல்லிவிட்டபிறகும் நீங்கள் யூகிக்க முடியாததற்கு நான் என்ன செய்ய முடியும்? என்று திரைக்கதை நம்மைப்பார்த்து கேள்வி எழுப்புகிறது
சைக்கோக்கள் உருவாவதில்லை; உருவாக்கப்
படுகிறார்கள் என்பதை மாணவன் வகுப்பறையில் சகமாணவன்களால் சந்திக்கும் கொடூர அவமானங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சகமாணவன்களால் இழிவுபடுத்தப்படும் மாணவர்களின் உளவியலை காட்சி படுத்தியதற்கு பாராட்டுகள்.
ஆனால், ‘நீ ஒரு இம்போண்டண்ட். அதனால், உன்னை காதலிக்கமுடியாது’ என்று காரணம் கூறி நிராகரிக்கவேண்டிய அவசியமே இல்லை. அப்படியென்றால், அவன் செக்ஸுவல் ரீதியாக தகுதியானவனாக இருந்தால் காதலித்திருப்பாளா? ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணின் மீது காதல் வரவேண்டும் என்றால் அவன் செக்ஸுவல் ரீதியாக ஃபிட்டாக இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை. நட்பாக பழகிவிட்டதால் காதலித்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. ஆனால், அவளது நிராகரிப்புதான் சைக்கோ ஆவதற்கான பின்னணி கரு என்றால்…
அவனது தோற்றத்தை வைத்தே நிராகரித்திருப்பது
போல் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்பது ஸ்மால் ரிக்வெஸ்ட்.
ஒரு பிரச்சனையால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டவரை சைக்கோவாக காட்டினால், அப்பிரச்சனையுடைய எல்லோரையும் சைக்கோவாகத்தான், இச்சமூகம் பார்க்கும் என்பதை இயக்குனர் மறந்துபோனது ஏன்? உடல் பாதிப்படைந்த கிறிஸ்டோபரை பார்த்தால் பரிதாபமே ஏற்படுகிறது.
சைக்கோவாக காண்பிக்கப்படுபரின் பெயர் கிறிஸ்டோபர். அவரது, அம்மா பெயர் மேரி என வைத்து கிறிஸ்துவ சிறுபான்மை பெயரைச் சூட்டியிருக்கிறார்.
கிறிஸ்துவர்களில் சைக்கோவே இருக்கமாட்டார்களா? என்று கேள்வி எழுப்பலாம். ஆனால், படம் முழுக்க கிறிஸ்துவர்களையே சைக்கோக்களாகவும் வில்லன்களாகவும் சித்தரித்து முண்டாசுப்பட்டி முற்போக்கு ராம்குமார் ‘ஹரி’ ராம்குமாராக ட்விஸ்ட் அடித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
மதிப்பெண்ணை வைத்து மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் காமக்கொடூர ஆசிரியரின் பெயரும் இன்பராஜ். இப்பெயர் பெரும்பாலும், கிறிஸ்துவத்தில் சூட்டப்படும் பெயர். மேலும், அவரது தோற்றமும் மீசை மழிக்கப்பட்டு கிறிஸ்துவ பாதிரியாரின் தோற்றத்தைப் போலவே இருக்கிறது.
மேலும், திருமணமாகாதால்தான், அவர் அப்படி நடந்துகொள்வதாக காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. பள்ளிகளும் கிறிஸ்துவப்பள்ளிகள். இதைவிடக்கொடுமை. அந்த ஆசிரியனுக்கு மாணவிகளை அழைத்து செல்பவரின் ஆட்டோவிலும் கிறிஸ்துவர்கள் வீடுகளில் தொங்கும் ‘ஸ்டார்’ குறியீடு உள்ளது.
ஹீரோயின் ஆபத்தில் மாட்டிக்கொள்வார். ஹீரோ எண்ட்ரியாகி வில்லன்களை பொளந்துகட்டுவார். உடனே, ஹீரோயினுக்கு ஹீரோவின்மீது காதல் வந்துவிடும்மல்லவா? அதுதானே, சினிமா எத்திக்ஸ்? அமலாப்பாலுக்கும் அப்படியே, விஷ்ணுமீது காதல் வந்துவிடுவது மட்டும்தான் படத்தின் யூஷுவல். ஆனால், ஓப்பனிங்லிருந்து எண்ட் வரை யூகிக்கமுடியாமல் திகிலில் உரைய வைத்திருக்கிறார் இயக்குனர். சீட்டுக்கட்டுகளையே பிளேடுபோல் சீறிப்பாய்ந்து சீவும் ராட்சனின் மேஜிக் ஃபைட் செம்ம்ம்ம்ம த்ரில்.
மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கணவனை கொலைசெய்யும் தாயை கொலைவழக்கில் கைது செய்யாமல் இதுபோன்ற சூழலில் தற்காத்துக்கொள்ள கொலையும் செய்யலாம் என்று மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை காட்சிப்படுத்தி பெண்களின் பாதுகாப்பையும் காமக் கொடூரன்களை கதிகலங்கவும் வைத்திருக்கிறார்.
ட்வின்ஸ் ட்விஸ்ட் செம்ம. அதுவும், சைக்கோவிடமிருந்து ஒரு மாணவி தப்பித்து ஓடிவருவதற்குள் ஹார்ட் பீட் எகிறி குலைநடுங்க வைத்துவிடுகிறது.
இன்வெஸ்டிகேஷன் என்பது லத்தியால் வரவழைக்கப்படுவதில்லை புத்தியால் என்பதை சுட்டிக்காடியிருக்கிறது விஷ்ணுவின் புலன் விசாரணை. இதுபோன்ற, படங்களை தொடர்ந்து தயாரிக்கும் “த்ரில்லிங்” பாபுவுக்கு ஸ்பெஷல் கங்கிராட்ஸ்.
பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகளை ஆசிரியர், ஆட்டோக்காரர், சகமாணவர்கள் என ராட்சசன்களிடமிருந்து எச்சரிக்கைப்படுத்திக்கொண்டே நம்மை இழுத்துக்கொண்டு ஓடுகிறது திரைக்கதை. எண்ட் கார்டு போட்டபிறகுதான் ஹீரோ பெருமூச்சு விட்டாரோ இல்லையோ… ஆடியன்ஸ் பெருமூச்சு விட்டபடி நடுக்கத்துடன் செல்கிறார்கள். வீட்டிற்கு செல்லும்போதும் ராட்சசன் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறான்… எந்தப்பக்கம் திரும்பினாலும் ராட்சசன் பயமுறுத்துகிறான்.
கண்களை மூடினாலும் ஹூஹூம்!!!!
– வினி சர்பனா
Discussion about this post