நாம் உண்ணும் உணவின் நன்மை, தீமை அறிந்து உண்ணுகிறோம். ஆனால் அதனை தகுந்த நேரத்தில் யாரும் உண்ணுவதில்லை. பசிக்கும் போது உண்ணாமல் பசிக்காத நேரத்தில் பலரும் உண்ணுகின்றனர். அவ்வாறு பசிக்காத நேரத்தில் உண்ணும் போது பல விளைவுகள் நேரிடும். எனவே அதனை தகுந்த நேரத்தில் உண்பதே நன்மை.
முதலில் பசியினை அறிய வேண்டும். ஹைட்ரோகுளொரிக் ஆசிட் என்னும் அமிலம் உணவினை செரிக்க உதவுகிறது. இது அமிலத்த்ன்மை நிறைந்தது. பசியின் போது உணவினை தவிர்ப்பதால் இதன் அமிலத்தன்மை குடலில் புண்களை உருவாக்கும். அதேப்போல் நாம் பசியின்றி உண்ணும் உணவும் செரிமானம் ஆகாமல் தேங்கி இருந்து அவைகுடல் வீக்கம் , குடல் புண் முதலியவற்றை உருவாக்கி வாய்வையும் அதிகப்படுத்துகிறது.
”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
என்னும் திருக்குறளில் ஒருவர் தான் உண்ட உணவினை செரித்த தன்மையை தெளிவாக அறிந்து பின்னர் உண்பானால் அவன் உடம்புக்கு மருந்து என்பது வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர்.
எனவே பசியின் போது மட்டும் உணவினை உண்டு வந்தால் மருந்தே உணவுதான். அதே நேரம் பசியின் போது அளவுக்கு மீறி சாப்பிடுவது கெடுதலை தரும்.
Discussion about this post