கூந்தலின் பிரச்சனை முதலில் நமது உணவில் தொடங்குகிறது. முடியானது புரோட்டின் மற்றும் அயர்னால் ஆனது. தினமும் சரியான அளவில் புரோட்டின் மற்றும் அயர்ன் கிடைக்குமாறும், பி காரோட்டின் நிறைந்த காய்கறிகளை எடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவைகளில் புரோட்டின் மற்றும் அயர்ன் நிறைய அளவில் இருக்கிறது.
க்ஷாம்பு பயன்படுத்துகிறவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் பயன்படுத்துகிற க்ஷாம்பு முழுக்க முழுக்க கெமிக்கல் நிறைந்ததாகும்.அப்படிப்பட்ட க்ஷாம்பு பெரிய வினையாக அமையக்கூடும். ஹெர்பல் க்ஷாம்பு நல்லது. அதுவும் வீட்டிலேயே தயாரிக்கும் க்ஷாம்பு மிகவும் நல்லது.
சீகக்காய் 300 கிராம், பூந்திக்கொட்டை 7 அல்லது 8, கருவேப்பிலை 1 கப் காயவைத்தது, ஆவாரம் பூ1 கப் காயவைத்தது, பாசிப்பயறு 150 கிராம், செம்பருத்தி இலை மற்றும் பூ 1 கப் காயவைத்தது, இவற்றை எல்லாம் கொண்டு வீட்டிலேயே க்ஷாம்பு தயாரிக்கலாம்.
இவை அனைத்தையும் நன்கு காய வைத்து அரைத்து கொள்ளவும். இதனில் 2 ஸ்பூன் அல்லது கூந்தலின் அளவிற்கு ஏற்றார்ப்போல்3 அல்லது 4 ஸ்பூன் எடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடித்து எடுத்து க்ஷாம்புவாக உபயோகிக்கலாம். அல்லது சோறு வடித்த நீரை ஊற்றி ஊற வைத்து தேய்த்து அலசினால் முடிகொட்டுதல் குறைந்து, நன்கு சுத்தமாகும். முடியும் மென்மையாகும்.
சீத்தாப்பழக் கொட்டை
சீத்தாப்பழக் கொட்டையினை நன்கு காயவைத்து பொடித்து எடுக்கவும். அதனை ஊற வைத்து அரைத்த வெந்தயத்தில் சேர்த்து தேய்த்தால் தலையில் பேண், பொடுகு, போன்றவை அகலும். சீத்தாப்பழக் கொட்டையினை அரைத்து பொடி செய்து வைக்கலாம். ஆனால் 1 டீஸ்பூன் அளவை மட்டும் உபயோகிக்கனும் அதற்கு அதிகமாக உபயோகித்தால் கண் எரிச்சல் உண்டாகும்.
மேலும் முட்டையின் வெள்ளைக்கரு முடியின் மென்மைக்கு உதவும்.
தயிரில் எலுமிச்சைப்பழம் போட்டு தேய்த்து குளித்தால் பொடுகு அகலும்.
சின்ன அல்லது பெரிய வெங்காயம் அரைத்து வடிகட்டி அதன் சாறினை தேய்த்து வந்தால் முடி நன்கு வளரும்.அதில் உள்ள சல்பர் வளர்ச்சிக்கு உதவும்.
Discussion about this post