சிங்கம், சாமி போன்ற படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்ததுபோல் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் 2ம் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்தது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வட சென்னை’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் 2 மற்றும் 3ம் பாகங்கள் உருவாக உள்ளன என்றார் இயக்குனர். இதுபற்றி இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது: ’வட சென்னை படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. ஆனால் எந்தவொரு காட்சியும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டை தொடர்ந்து 2 மற்றும் அடுத்தடுத்து பாகங்கள் வெளிவரும்.
இப்படத்தில்அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்க தோற்றத்தை மாற்றிக்கொண்டதுடன் பேச்சு. நடிப்பு பாணி எல்லாவற்றிலும் அசத்தியிருக்கிறார் தனுஷ். இப்படத்துக் காக ஜெயில் செட், வட சென்னை பகுதி செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, அமீர் நடிப்பும் பேசப்படும்’ என்றார். நடிகர் தனுஷ் கூறும்போது,’இயக்குனர் வெற்றிமாறனுடன் மீண்டும் புதிய படத்தில் நடிப்பது சந்தோஷ மாக இருக்கிறது. வட சென்னை வரும் 17ம் தேதி வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ். இரவு பகல் பாராமல் அனைவரும் இப்படத்துக்காக பணியாற்றினார்கள்’ என்றார்.
Discussion about this post