இரவு உணவை சீக்கிரமாகவே முடித்துக் கொள்வது நல்ல பழக்கம் என பெரியவர்கள் சொல்வார்கள். அதற்கு, சாப்பிட்ட உணவு செரிமானமாகி வயிறு காலியாக படுத்தால் நல்ல தூக்கம் வரும் என்று முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், இப்போது அந்தப் பழக்கம் நம்மை புற்றுநோய்களிலிருந்தும் காக்கும் என்று கூறுகிறது ஒரு நவீன ஆய்வு. படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு சாப்பிடுவது மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களுக்கான குறைவான ஆபத்தோடு தொடர்புடையதாகிறது.இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் உணவுத் தேர்வுகளோடு புற்றுநோய் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களில் உணவு உட்கொள்ளுதல் மற்றும் உணவு உட்கொள்ளும் நேரத்தால் ஏற்படும் ஆரோக்கிய விளைவுகளை யாரும் கவனிப்பதில்லை.
இதுதொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இரவு 9 மணிக்கு முன்னர் இரவு உணவை முடித்தவர்கள் அல்லது இரவு உணவுக்குப் பின்னர் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்து உறங்கச் சென்றவர்கள் மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோயை 20% குறைவாகக் கொண்டிருந்தனர். தினசரி உணவை உட்கொள்ளும் முறை மற்றும் கடைசி உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே நீண்ட இடைவெளியைக் கொண்டிருப்பதும் குறைவான புற்றுநோய் ஆபத்துடன் தொடர்புடையது. மேலும் உணவு மற்றும் புற்றுநோய் குறித்த ஆய்வுகளில், உணவு உண்ணும் நேரத்தையும் மதிப்பீடு செய்வது முக்கியம் என்பதையும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
Discussion about this post