இன்றைய காலக்கட்டத்தில் நேரம் என்பதே கிடையாது. நேரம் என்றும் பொன்னானது. ஆனால் நாம்தாம் நேரத்திற்கு சாப்பிடுவதும் இல்லை. நேரத்திற்கு தூங்குவதும் இல்லை. நேரம் காலம் இன்றி நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று பல பேருக்கு இன்னும் தெரியாது. உறுப்புகளும் செயல்பட நேரம் ரொம்ப முக்கியம்.
காலை 5 மணி முதல் 7 மணி வரை
இது பெருங்குடலுக்கான நேரம் இந்த நேரத்தில் காலை கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.
காலை 7 மணி முதல் 9 மணி வரை
இது வயிற்றிற்க்கான நேரம் இந்த நேரத்தில் காலை உணவை சாப்பிடுவது மிக மிக அவசியம். நன்கு ஜீரணமாகும்.
காலை 9 மணி முதல் 11 மணி வரை
மண்ணீரலுக்கான நேரம் வயிற்றில் விழும் உணவினை செரிக்கும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக்கூடாது. அப்படி இந்த நேரத்தில் சாப்பிடுபவராக இருந்தால் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகள் கட்டாயம் ஏற்படும்.
காலை 11 மணி முதல் 1 மணி வரை
இதயத்தின் நேரம் இந்நேரத்தில் டென்சன், சத்தமாக பேசுதல், படபடத்தல், கோபம், அறவே தவிர்க்க வேண்டும். அதுவும் இருதய நோயாளிகள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
1 மணி முதல் 3 மணி வரை
சிருகுடலுக்கான நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வு என்பது உறக்கம் இல்லை.
3 மணி முதல் 5 மணி வரை
சிறுநீர் பையின் நேரம் நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
5 மணி முதல் 7 மணி வரை
சிறுநீரகங்களின் நேரம் தியானம், இறை வழிபாடு செய்தல் நல்லது.
7 மணி முதல் 9 மணி வரை
பெரிகார்டியம் வேலை நேரம். பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கான நேரம். சூரியன் மறைந்ததும் நமது செரிமான சக்தியும் குறைகிறது. 8 ம்ணிக்கு முன்னால் இரவு உணவினை முடித்தால் உடல் எடை குறையும். உடல் நலம் பெறும்.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை
உச்சந்தலை முதல் அடிவயிறு வரையிலான நேரம். அமைதியான நேரம் இந்த நேரத்தில் உறக்கம் மிகவும் அவசியம்.
இரவு 1 மணி முதல் 3 மணி வரை
கல்லீரலுக்கான நேரம் இரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும். கட்டாயம் ஆழ்ந்து உறங்க வேண்டும்.
விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை
பித்தப்பைக்கான நேரம். அவசியமாக உறக்கம் தேவை.
இவையே அனைத்து பாகங்களையும் சுத்தம் செய்ய அவசியம். இதன் அடிப்படையில் உடல் இயங்கினால் நிச்சயம் உடல் நிலை நன்றாக இருக்கும். பசி, தாகம், உறக்கம், அனைத்தும் இவற்றை சார்ந்ததே. இவை அனைத்தும் சரியாக இருந்தால் ஒருவரின் உடல் நிலை சரியாக இருக்கும்.
Discussion about this post