வேர்கடலையில் கொழுப்பு சத்து இருக்கிறது.இது நல்ல கொழுப்பு. உடம்புக்கு தேவையான கொழுப்பு. இதில் புரதச்சத்து இருக்கிறது. இது ஏழைகளின் புரதம் என்று சொல்லலாம். வேர்கடலையில் 30 விதமான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. உடம்பில் சர்க்கரை அளவு மிக மிக குறைவு. சர்க்கரை வியாதிகாரர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
வேர்கடலையில் உள்ள மேக்னீசியம் இன்சுலின் சுரக்குற ஹார்மோன்களை வேகப்படுத்திற தன்மை இருக்கு. இது சர்க்கரை வியாதிக்கு நல்லது. இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தக் கூடிய தன்மை சோடியத்திற்கு உண்டு. வேர்கடலையில் சோடியம் அளவு மிக குறைவு. எனவே வேர்கடலை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. வேர்கடலை சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.
வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் இருக்கிறது. இதனால் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் இரத்த குழாய்களை விரிவடைய செய்யும். இதனால் சீரான இரத்தம் ஓடும். இரத்த அழுத்தம் குறையும். வேர்கடலையில் நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாது.
வேர்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி3 அதிகமாக இருக்கிறது. கர்ப்பினி பெண்களுக்கு நல்லது. மேலும் வேர்கடலையில் உடம்பில் புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கிற செல்களை அழிக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் , மலக்குடல் புற்றுநோய், நிலநீர் புற்றுநோய், போன்றவை உருவாக காரணமாக இருக்கிற செல்களை அழிக்கிறது.
வேர்கடலையில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. வேர்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் தொடர்புடைய நோய் குறையும். ஞாபக மறதி நோய் வராமல் தடுக்கிறது.
வேர்கடலையை பச்சையாக சாப்பிடக்கூடாது. அவித்தோ அல்லது வறுத்தோ வேர்கடலையை சாப்பிடலாம். ஆனால் எண்ணெய்யில் வறுத்து சாப்பிடக்கூடாது. தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும் . கசப்பாக இருந்தால் சாப்பிடக்கூடாது. புதிதாக உள்ள வேர்க்கடலை மட்டும்தான் சாப்பிட வேண்டும். இல்லை என்றால் வயிற்று ஜீரணத்தை பாதிக்கும். அவித்து சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.
Discussion about this post