இந்தியாவிலேயே சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் ஏராளமான பகுதிகள் உள்ளன. ராஜஸ்தான், கேரளா, ஹிமாச்சலபிரதேசம் என கண்ணைக் கவரும் வகையில் ஏராளமான சுற்றுலா பகுதிகள் இருப்பிலும், தமிழகம் தான் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதில் முதலிடம் வகிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
இந்தியாவிற்கு வருடந்தோறும் ஒரு கோடியே 97 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். இதில் கடந்த ஆண்டு 34 லட்சம் சுற்றுலாப்பயணிகள் தமிகத்திற்கு மட்டும் வருகை தந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுற்றலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் தெரிவித்துள்ளார்.
இந்திய சுற்றுலாத்துறையை பொறுத்தவரை 14 சதவீதம் வருவாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 140 கோடி ரூபாய் செலவில் பல்வேறு சுற்றுலா வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 2020ம் ஆண்டுல் சுற்றுலா மூலம் 50 மில்லியன் டாலரும், 2023ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post