காலிஃப்ளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிஃப்ளவரை சாப்பிடும்போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. காலிஃப்ளவரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது.
காலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டுவலியை குறைப்பதில் காலிஃப்ளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும்.
Discussion about this post