சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தபொழுது பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலத்தில் பேசினார்.
மக்களுடனான சந்திப்பு என்ற தலைப்பில் மக்கள் நீதிமைய தலைவர் கமல்ஹசன் 3 நாள் பயணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் பொதுமக்களை சந்தித்து காரில் இருந்தபடியே உரையாற்றினார்.
அப்போது பேசிய கமல், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அடிக்கடி வெளிநடப்பு செய்து கொண்டிருக்கும் போது, பொறுப்புள்ள அரசியல் கட்சியாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் சட்டப்பேரவையில் திமுக அடிக்கடி வெளிநடப்பு செய்து வருவதை சுட்டிக்காட்டி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதுபோல் இருக்கமாட்டோம் என்பதை பதிவு செய்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுபோல் அடிக்கடி வெளிநடப்பு செய்வது சரியான செயல் அல்ல என்பதையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.
இதையடுத்து மல்லசமுத்திரத்தில் பேசிய கமல், “எங்களுக்கு ஓட்டு போட்ட பின்னர் தான் உங்களுக்கு நல்லது செய்வோம் என்றில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே மக்கள் நலன் மட்டுமே மக்கள் நீதி மய்யம் கட்சியின் நோக்கமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.
Discussion about this post