சபரிமலைக்கு வரும் இளம்பெண்களை இரண்டாக வெட்டுவோம் என மலையாள நடிகர் ஒருவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை போகலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது உத்தரவிட்டது. நாடெங்கும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஆர்பாட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் கொல்லம் துளசி இதுகுறித்து கூறியதாவது “நமது நம்பிக்கைக்கு எதிராக சபரிமலை தொடர்பாக நான்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அவர்கள் நால்வரும் முட்டாள்கள். அந்த தீர்ப்பை ஒட்டி சபரிமலைக்கு இளம்பெண்கள் வந்தால் அவர்களை இரண்டு துண்டாக வெட்ட வேண்டும். அவற்றில் ஒன்றை டில்லிக்கும் மற்றொன்றை கேரள மாநில முதல்வருக்கும் அனுப்ப வேண்டும்.
பலபெண்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த பெண்களிலும் வயதான பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு போகலாம். அவர்களில் யாராவது இளம்பெண்கள் சபரிமலைக்கு போக முயன்றால் அவர்களையும் இரண்டு துண்டாக வெட்ட வேண்டும்” என அந்த பேரணியில் பேசி உள்ளார். இவ்வாறு வெளிப்படையாக வன்முறையை தூண்டும் படி கொல்லம் துளசி பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
Discussion about this post